குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு
குமாரபுரம் படுகொலை நினைவேந்தல் தினம் நேற்று(11.02.2026) குமாரபுரம் கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த 11.02.1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 26 பேரும் நினைவுக்கூரப்பட்டுள்ளதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்வு, குமாரபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மனு கையளிப்பு
மேலும், இதில் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்ப்பாட்டார்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களால் "உள்ளக நீதிப் பொறி முறையில் நம்பிக்கை இல்லை" சர்வதேச நீதிப் பொறி முறை ஊடாகவே குமரபுரம் படுகொலைக்கு நீதி வேண்டும்" என வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு மனு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


