மட்டக்குளிய இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி கைது
கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியில் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவின் தகவல்படி, சந்தேகத்திற்குரிய இராணுவ அதிகாரியை, விசாரணைக்காக ஒப்படைக்குமாறு பொலிஸார் இராணுவ பொலிஸாரிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று பிற்பகல், குறித்த அதிகாரியை, இராணுவம், பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்குளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
இந்தநிலையில், கொலை தொடர்பாக இறந்தவரின் மனைவி மற்றும் மட்டக்குளிய இராணுவ முகாமில் பணியாற்றும் 13 இராணுவத்தினரை பொலிஸார் கைது செய்தனர்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில், கருத்துரைத்திருந்த, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு, குற்றச் செயல்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
