மாவீரர் நாளில் யாழ் நகரில் களமிறக்கப்பட்ட இராணுவம்! கட்டளை தளபதி கொடுத்துள்ள விளக்கம்
யாழ்.மாவட்டத்தில் படையினர் களமிறக்கப்பட்டிருப்பது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே என யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க தெரிவித்துள்ளார்.
யாழ்.புத்தூர் பகுதியில் இன்று வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவது என் என வினவியதற்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.நகரில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுகின்றது. எனினும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது இராணுவத்தின் கடமையாகும். அதனை இராணுவத்தினராகிய நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினர் ஆகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம். அதனடிப்படையில் தற்போது பொலிஸாருக்கு உதவும் முகமாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு சட்டம் ஒழுங்கினை பொலிஸார் நிலைநிறுத்துவதற்குச் செயற்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
