பொலிஸ் மற்றும் இராணுவத்தை இணைத்து நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை! - அமைச்சர் சரத் வீரசேகர
திட்டமிட்டப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸ் சிறப்பு பணிக்குழு மற்றும் இராணுவம் ஆகியவற்றை இணைத்து சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை மற்றும் பொதுமக்களின் முழு ஆதரவோடு இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும், பொலிஸ் அவசர எண் 118 மற்றும் 119 மூலம் மக்கள் தகவல்களை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் பொது மக்களுக்கு எந்தவித அச்சமும், சந்தேகமும் இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ வசதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
