வடக்கு நீலங்களின் சமர் போட்டிகள் ஆரம்பம் (PHOTOS)
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி துடுப்பெடுத்தாடியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்றதுடன், களத்தடுப்பை தெரிவு செய்து போட்டிக்கு தயாரான இரு அணியினருக்கும் விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்தும் பார்வையாளர்களின் வரவேற்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக ஆரம்பமான குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் 50.2 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 181 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
துடுப்பாட்டத்தில் மத்திய மகா வித்தியாலயம் சார்பில் தஜீபன் 41 (48 பந்துகளில்), பாவலன் 27(125 பந்துகள்) பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி சார்பில் தமிழ்ப்பிரியன் 4 இலக்குகளையும், ஹரிசாந் 3 இலக்குகளையும் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரை 32 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
களத்தில் பகலவன் 34 ஓட்டங்களுடனும், கிருசாந் 6 ஓட்டங்களுடனும், சுலக்சன் நிறோஜிதன் ஆகியோர் தலா ஒரு இலக்கினையும் கைப்பற்றியுள்ளதுடன், நாளைய தினம் இரண்டாவது நாளுக்கான போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
