இளைஞனை ஓடஓட படுகொலை செய்து பதற்றத்தை ஏற்படுத்திய நபர் - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பேருந்து டிப்போவில் வைத்து நேற்றிரவு(13.06.2023) சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பாணந்துறை கிரண பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக பாடசாலை மாணவர் ஒருவர் முன்பு கைது செய்யப்பட்டார். தாக்குதலை நடத்துவதற்கு உதவி வழங்குவதற்காக பாடசாலை மாணவர் பிரதான சந்தேகநபருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இரவு ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஒருவர் வாளால் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடியுள்ளார். அதன் பிறகு சந்தேகநபர் பின்தொடர்ந்து அவரை கொடூரமாக வாளால் வெட்டியுள்ளார். இதன் விளைவாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மொதரவில பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |