கொழும்பில் நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி தொடர்பில் வெளியான தகவல்
அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய பாத்திமா ஃபஸ்னா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி உட்பட 7 பேர் நேற்று மதியம் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்கு சென்றிருந்த நிலையில், யுவதி செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்மூழ்கிக்குழுவின் தேடும் பணி தீவிரம்
குறித்த யுவதி தவறி விழுந்த உடன் தனக்கு நீச்சல் தெரியாது எனக்கூறி உதவிக்கோரியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்திருந்த போதும் முயற்சி பயனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யுவதியை தேடும் பணியை தொடர கடற்படையின் நீர்மூழ்கிக்குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
