மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி கொழும்பு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் (31.12.2024) அவர் உயிரிழந்துள்ளார்.
புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் (வயது 23) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்தி வைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினுடம், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
