பொலிஸாரை மிரட்டிய நபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தெல்கந்த பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (09) இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
போக்குவரத்து விதிகளை மீறி மஹரகம ஹைலெவல் வீதியில் காரொன்று பயணித்ததால், தெல்கந்த சந்தியில் வைத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த காரை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் காரில் வந்த குறித்த நபர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, அவர்களை நோக்கி நான் யார் என்று தெரியுமா?, நான் யாருக்கும் பயமில்லை, எப்படியும் என்னுடைய சாரதி அனுமதிப்பத்திரம் என் வீட்டிற்கே வந்து சேரும் என கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு மிரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
