கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் நேர்ந்த துயர சம்பவம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி பயணித்த விமானத்தில் இந்த விபரீத சம்பவம் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
இந்த பயணிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். சுகயீனம் ஏற்பட்டவுடன் மருத்துவரின் உதவியை நாடிய போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
உயிருக்கு போராடிய பயணி
சில நிமிடங்களில், பயணிகளும் பணியாளர்களும் இலங்கை நோயாளியை காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் இருந்த மருத்துவர்கள் பயணி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணித்த இலங்கையர் சம்பவம் தொடர்பான உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரை காப்பாற்ற முதற்சந்தர்ப்பத்தை நேரில் கண்டேன். எனினும் அனைவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது. அந்த சந்தர்ப்பத்திலும் அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருகுவதை கண்டேன்.
முகந்தெரியாத ஒருவருக்கான இந்த கண்ணீர் மனிதாபிமானத்தின் உச்சமாகும்.
இந்த உலகில் அன்பு ஒன்று தான் நிஜம். அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
