தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணத்தை உறுதி செய்த பொலிஸார் - வெளியிடப்பட்ட புதிய தகவல்
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், டிசம்பர் 10 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று முன்னைய பரிசோதனையை மேற்கொண்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நீதவான் சாட்சிய விசாரணையிலும் குடும்பத்தாருக்கும் இது அறிவிக்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை மயானத்தின் ஊழியர் ஒருவரால் தினேஷ் ஷாப்டரின் கழுத்து மற்றும் கைகள் காரில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
பொரளை பொது மயானத்தில் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரது கழுத்தில் கிடந்த கேபிளையும், கைகள் கட்டப்பட்டிருந்த கேபிளையும் வீட்டில் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.வீட்டில் பணியாற்றும் ஊழியர் மூலம் அதனை அவர் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஷாப்டர் தனது கைகளில் கேபிளை கட்டி ஓட்டுநர் இருக்கையைப் பயன்படுத்தி தன்னைத்தானே கழுத்தை நெரித்ததுள்ளார்.அதே நேரத்தில் அவரே தனது கழுத்தை நெரித்ததால் கடைசி மூச்சு எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், புலனாய்வாளர்கள் அவரது நடத்தைகள் பலவற்றின் ஆதாரங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வியாபார நடவடிக்கைகளால் கடன் சுமை அதிகரித்ததன் காரணமாக மன உளைச்சலுக்கு மருத்துவ சிகிச்சை கூட பெற்றதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார்.
இந்த ஆதாரங்களுடன், உடல் மற்றும் அறிவியல் ஆதாரங்களும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்ம மரணம் மற்றும் சிசிடிவி தொடர்பாக ஷாப்டரின் மனைவி, அத்தை உட்பட 84 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஷாப்டரின் அனைத்து அசைவுகளும் நாற்பது கேமரா காட்சிகளால் ஆராயப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் பணிப்புரையின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்த, கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.