கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்கள் சரிவைச் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தையின் குறியீடுகள், இன்று (8) மீண்டும் உயர்வை அடைந்தன.
அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 467.26 புள்ளிகள் உயர்ந்து 15,127.71 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வர்த்தக நடவடிக்கை
அதே வேளையில், S&P SL20, விலைக்குறியீடு 190.29 புள்ளிகள் உயர்ந்து 4,455.13 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதேவேளை, நேற்றைய தினம் (07.04.2025) கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன் வர்த்தகம் 2.89 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
