நீட்டிக்கப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம்: வெளியான அறிவிப்பு
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பணிப்பாளர் சபை, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் பங்குத் தரகு தொழில்துறையினரின் ஆலோசனையுடன், வர்த்தக நேரத்தை மீண்டும் வழமை நிலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை இன்று (15) முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
அதன்படி, வழக்கமான வர்த்தகம் காலை 10.00 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.30 மணிக்கு சந்தை முடிவடையும்.
நேர விபரங்கள்
இந்நிலையில் இன்று முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது:
முன்-திறப்பு அமர்வு (Pre-open session) - காலை 09.30 முதல் 10.00 மணி வரை,
திறந்த ஏலம் (Open Auction) - காலை 10.00 மணிக்கு,
வழக்கமான வர்த்தகம் (Regular Trading) - காலை 10.00 மணிக்கு தொடங்கும்,
சந்தை மூடல் (Market close) - மதியம் 12.30.