கொழும்பு ஜோசப்வாஸ் மன்றத்தினால் 30ஆவது தடவையாக நடைபெறவுள்ள பெரிய சிலுவைப்பாதை
மனுக்குலத்தின் பாவங்களைப் போக்க, கடவுள் மனுவுருவெடுத்து சிலுவை மரணம் ஏற்றார்.
இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூரும் முகமாக கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தால் 30ஆவது தடவையாக ஒழுங்கு செய்யும் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது 2026 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.00 மணிக்கு , கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், ஜிந்துப்பிட்டி புனித வேளாங்கண்ணி ஆலயம் வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் பேராலயத்தை வந்தடையவுள்ளது.
புனித லூசியஸ் பேராலயத்தின் வளாகத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் எண்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இத் திறந்தவெளி பெரிய சிலுவை பாதையில் கலந்து கொண்டு இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri