‘‘கோட்டா கோ கமவில்’’ துரித 4G, 5G இணைய வசதி (PHOTOS)
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்களுக்கு இணைய வசதியை மேம்படுத்த கோட்டாகோகம கிராமத்தில் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு காலி முகத்திடலில் இளைஞர்களால் இன்று ஏழாவது நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டு நேரலையாக செய்திகளை வெளியிட முடியாத நிலையை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'கோட்டா கோ கம' பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
