யாழில் பிறந்தவரால் கொழும்பில் உருவான பலரையும் வியக்க வைக்கும் பெருங்கோயில்..! (Video)
இலங்கையில் பல வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வடிவமைப்புகளும் வரலாற்று பின்னணியும் தனித்துவமிக்கவையாக காணப்படுகின்றன.
இதற்கமைய 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்ட, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயமும் தனக்கென்று ஓர் தனித்துவத்தை கொண்டுள்ளது.
முற்றுமுழுதாக கருங்கற்களால் கட்டப்படவில்லை
பொன்னம்பலம் முதலியாரின் புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே கருங்கல்லால் புதியதொரு கோயிலை 1912 ஆண்டு கட்டியிருக்கிறார்.
இக்கோயிலின் கட்டடம் விஜயநகரக் கட்டடக்கலையை தழுவிக் கட்டப்பட்டதுடன் தஞ்சா ஊர் பெரிய கோவில் பாணியிலும் கட்டப்பட்டுள்ளது.
இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த கோவில் முற்றுமுழுதாக கருங்கற்களால் கட்டப்படவில்லை என்பதை பலர் அறிய மாட்டார்கள்.
இதுபோன்று பலர் அறியாத கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் பல விடயங்களை சுமந்து வருகின்றது லங்காசிறியின் பயணம் நிகழ்ச்சி,
