கொழும்பில் கோர விபத்து - பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகிலுள்ள மதில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துருகிரிய நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் இருவர் பலி
தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவனும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும், ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.