இலங்கை பொலிஸாரின் பயிற்சியை மீளாய்வு செய்யும் பிரித்தானியா!
இலங்கை பொலிஸாருக்கு பிரித்தானியா வழங்கிய ஆதரவின் தாக்கத்தை ஆராயவும், கற்றுக்கொண்ட பாடங்களை அடையாளம் காணவும் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கவும், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் மீளாய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான தற்போதைய திட்ட ஒப்பந்தம் மற்றும் கடந்த 31 மார்ச் 2022 அன்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்தநிலையிலேயே கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், எதிர்கால மோதல், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிதி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை பிரித்தானிய நாடாளுமன்ற துணை செயலாளர், விக்கி ஃபோர்ட் அண்மையில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா
இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை தமது அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெற்காசிய அமைச்சர், விம்பிள்டனின் பிரபு (தாரிக்) அகமது வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் பொறுப்புக் கூறப்பட வேண்டும் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொலிஸ் படையுடனான தமது பயிற்சி ஒப்பந்தம், 2022 மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், மனித உரிமைகள் தொடர்பான கவலைகள் காரணமாக, அதனை நீடிக்கப் போவதில்லை என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பொலிஸ் ஸ்கொட்லாந்து கடந்த நவம்பரில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
