பசில் கூறுவதற்கு ஏற்ப செயற்படுவதற்கு நான் பொம்மை கிடையாது! விஜயதாச காட்டம்
பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை கிடையாது என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27.04.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பசில் ராஜபக்ச பெரும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் அவர் நினைப்பதைப் போன்று நான் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது. நான் விஜயதாச ராஜபக்ச, அதுவும் சட்டத்தை நன்றாக அறிந்த நீதி அமைச்சர்.
அதே போன்று பசில் ராஜபக்ச கூறுவதற்கு ஏற்ப ஆட நான் ஒன்றும் பொம்மையும் கிடையாது.

எனவே பசில் அவரால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.
அதே போன்று சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடியே என்னைப் பதில் தலைவராக நியமித்துள்ளது.
அந்த விடயம் சட்டபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. அதனையும் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri