சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றது: ஆளுநர் செந்தில் தொண்டமான்
சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக பிடிக்க முயற்சி
அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை சிங்கள, தமிழ், கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மக்கள்
யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க
முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்.

ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று. அது முற்றிலும் தவறான விடயமாகும்.
தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை. எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam