பூகோள மட்டத்தில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து!சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு துறைமுக நகரத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் இலங்கை எதிர்காலத்தில் பூகோள மட்டத்தில் அதிகாரமிக்க நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் போட்டித்தன்மைக்கு முகம் கொடுக்க நேரிடும். இதனால் பாரிய விளைவுகளையும் இலங்கை எதிர்நோக்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 43 ஆவது படையணி காரியாலயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது.
இச்சட்டமூலம் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுயாதீனத்தன்மையினை பாதுகாக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. இவ்விடயத்தில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக காணப்படுகிறது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri