சீனாவால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம்: அரசாங்க விதிமுறை
சீனாவால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வதற்கு அரசாங்கம் வர்த்தமானி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்போது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு சலுகைகள் மற்றும் விலக்குகளை அனுமதிக்கும் கட்டமைப்பை வெளியிடுவது இன்னும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போர்ட் சிட்டிக்குள் பரவலான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி இரண்டரை மாதங்களுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும்.
கொழும்பு போட்சிட்டி
எனினும் கொள்கை தாமதம் காரணமாக இந்த வெளியீட்டிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு போட்சிட்டிக்கு, பிராந்தியத்தில் போட்டிநிலை உள்ளதை வர்த்தகத்துறையினர் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
