கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபா முதலீடு செய்யும் சீன நிறுவனம்
கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்ய தயார் என சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் நிறுவனத்தின் தலைவர் வாய் இயன் சான் இதனைத் தெரிவித்துள்ளர்.
இந்த வருடத்திற்குள் குறிப்பிட்ட நிதியை கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு

தற்போது சீனாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரியுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் பூலின் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தின்
வளர்ச்சிக்காக தாம் ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கியின் தலைவர் அங்கு
உறுதியளித்துள்ளார்.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri