கொழும்புத்துறைமுக நகரப் பொருளாதார சட்ட திருத்தம் குறித்து குகதாசன் எம்பி முன்வைத்த கருத்து
2021 ஆம் ஆண்டின் 11ஆம் எண் கொண்ட கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணையகச் சட்டத்தை திருத்துவது பற்றிய சட்ட மூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "2021ஆம் ஆண்டின் 11ஆம் எண் கொண்ட சட்டத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரமானது, ஒரு தனித்துவமான அதிகார மண்டலமாக உருவாக்கப்பட்டது.
இது 100 சதவீத வெளிநாட்டு உரிமை மற்றும் 16 வெளிநாட்டு நாணயங்களில் வணிகம் செய்வதற்கான உரிமையையும் வழங்கியது.
பொருளாதார மண்டலம்
2025 நவம்பரில் அரசிதழில் வெளியிடப்பட்டு, 2025 டிசம்பரில் இந்த நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் பட்ட, துறைமுக நகரப் பொருளாதார ஆணைய திருத்தச் சட்ட எண் 41 ஆனது, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் (SEZ) வணிகம், முதலீடு மற்றும் நிருவாகத்தை மேலும் எளிதாக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் எண் கொண்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையகச் சட்டத்தைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தத்திற்கான 2025 ஆம் ஆண்டின் பரந்த நாடாளுமன்ற முயற்சிகளுடன் இணைந்து, நெறிப்படுத்தப்பட்ட விதிமுறைகள், ஊக்கத்தொகைகள் மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுடன் உலகளாவிய நிதி மற்றும் வணிக மையமாக கொழும்பு துறைமுக நகரச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பங்கை மேம்படுத்துகிறது.
‘2025 ஆம் ஆண்டின் 41ஆம் எண் கொண்ட கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுத் திருத்தச் சட்டமூலம்’ ஆனது, இலங்கையின் பொருளாதாரப் பாதையை மறுசீரமைக்க முனையும் ஒரு முதன்மையான மைல்கல்லாக காணப் படுகிறது.
இந்தத் திருத்தத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், துறைமுக நகரத்தை ஒரு ‘கட்டுப்பாடற்ற தன்னாட்சி வலயம்’ என்ற நிலையிலிருந்து ‘மூலோபாய ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பு’ கொண்ட ஒரு வலயத்திற்கு மாற்றுவதாகும். 2025 ஆம் ஆண்டின் 41 ஆம் எண் கொண்ட திருத்தச் சட்டமூலம் ஆனது, நான்கு முதன்மையான கூறுகளை அறிமுகப் படுத்துகிறது" என கூறியுள்ளார்.
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri