கொழும்பு துறைமுக நகர வணிக ஒப்பந்தங்கள்: கோப் குழு முன்வைத்துள்ள கோரிக்கை
கொழும்பு துறைமுக நகர வணிக செயற்பாட்டில் உள்ள 10 நிறுவனங்கள் மூன்று வெவ்வேறு உடன்படிக்கைகளை செய்துள்ளன.
இந்த செயற்பாடு முதலீட்டு இலக்குகள் மற்றும் ஏனைய விடயங்களில் வேறுபாடுகளை உருவாக்கக்கூடும் என்று கோப் நாடாளுமன்ற குழு அவதானித்துள்ளது.
வெவ்வேறு, விதிமுறைகளில் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளமையானது, திட்டத்தில் பங்கு முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாது, போர்ட் சிட்டி நிர்வாகத்திற்கும் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
சட்ட அடிப்படை
எனவே, இது குறித்து நான்கு வாரங்களுக்குள் சட்டமா அதிபரின் கருத்தை கோப் குழு கோரியுள்ளது.
குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா, இந்த ஒப்பந்தம் சட்ட அடிப்படையிலான ஒரு முறைமையின் கீழ் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பொது நிதிக் குழுவால் இந்த விடயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.