தனிநாட்டுக்கு இணையான துறைமுக நகரம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையக யோசனையை எதிர்த்து 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த யோசனை தொடர்ச்சியாக ஐந்து நாளாக உயர்நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறித்த யோசனை குறித்த தனது வியாக்கியானத்தை உரிய நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த யோசனை இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இந்த யோசனை நிறைவேற்றப்படுமானால் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் ஒரு குடியிருப்பாக மாற்றமடையும் என்றும் இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைக்கான மையம், ஐக்கிய தேசிக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ உட்பட்டவர்கள் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது விசேட செய்தி தொகுப்பு,