கொழும்பில் சக்திவாய்ந்த காளியம்மன் கோயிலில் வந்து செல்லும் விசித்திர நாகம்
கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற ஒரு பகுதியாக பரடைஸ் பிளேஸ் என்ற இடம் காணப்படுகிறது.
பரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதமானது தமிழில் சொர்க்கபுரி என அர்த்தப்படுகிறது. இந்த சொர்க்கபுரியில் சக்திவாய்ந்த காளியம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
உலகில் தல விருட்சங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து வளர்வது அபூர்வம். அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வதலத்திலே 1931ஆம் ஆண்டு இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் ஸ்ரீ மகா காளியம்பாள்.
1949ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் குறை தீர்க்கும் ஆலயமாக எழுந்து நிற்கிறது.
இந்த நிலையில் ஆலயத்திற்கு விசேட நாட்களில் நாகமொன்று வந்து செல்வதாக சுவாரஸ்ய தகவலொன்றும் இருக்கிறது.
இந்த ஆலயம் தொடர்பான இன்னும் பல முக்கிய தகவல்கள் காணொளியாக,



