கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து! பலர் பலி! மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் (VIDEO)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்ற மாணவர்களின் நிலைமை தொடர்பில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளானது.பாடசாலை மாணவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் வைத்தியசாலைக்கு போகின்றோம்.யாரும் தொலைப்பேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டாம். மாணவர்களின் நிலைமை தொடர்பில் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர விபத்தினால் வானில் வந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் மேலும் 51 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
