கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செவிலியர் விபத்தில் பலி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய செவிலியர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, களுத்துறை வீதி, கல்தூடே பகுதியில் வசித்து வந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயது ஜி.டி. ரமணி பிரேமலதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை அறையில் உயிரிழப்பு
நேற்று (10) காலை சுமார் 5.30 மணியளவில், வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக தனது வீட்டின் முன்புள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பேருந்தில் ஏறுவதற்காக வீதியை கடக்கும்போது, பேருந்து அவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்திற்கு பிறகு, அவர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை அறையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவரான எல்.சி. நனயக்கார, வைத்தியசாலையிலிருந்து தனது மனைவியின் உடலை பெற பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 38 ஆண்டுகளாக சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள தனது மனைவிக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால், மற்றவர்களுக்கு என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்புயுள்ளார்.
இதற்கிடையில், விபத்து தொடர்பில் கெஸ்பேவ பணிமனைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை