அநுர அரசின் அதிரடி நடவடிக்கை! கொழும்பில் தமிழர்கள் உட்பட பலரின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை
கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு நகரில் சொத்து வரிச் செலுத்தப்படாமை காரணமாக பல சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
காணிகள் பறிமுதல்
மாநகர சபைக்கு வரி செலுத்தாத கொழும்பு 07 பகுதியிலுள்ள 30 காணிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07 உள்ளிட்ட உயர் வணிக மதிப்புள்ள பிரதேசங்களில் உள்ள 30 காணிகள், கொழும்பு கோட்டைப் பகுதியில் 58 காணிகள் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் 67 காணிகள் பறிமுதல் செய்யும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள வரிப் பண அறவீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்குள் பெண்களுக்கு நடப்பது என்ன.. ஆடைகளற்ற சோதனை முதல் கடும் நெரிசல் வரை! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri