மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயர் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தேர்தலானது ஜூன் (02) ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு தேசிய மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு 48 ஆசனங்களை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 13 இடங்களையும் பெற்றுக்கொண்டது.
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தி 50% வரம்பைத் தாண்ட முடியாததால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அதிகாரத்தை உருவாக்க விவாதங்களைத் ஆரம்பித்துள்ளள.
கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை நிறுவ அரசியல் கட்சிகள் தங்கள் அதிகபட்ச சக்தியைச் செலுத்துவதால், இந்தப் உள்ளக அரசியல் மோதல் கடுமையான வடிவம் பெற்றுள்ளது.
மேலும் கொழும்பு மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு மிகவும் எதிர்பார்ப்புமிக்கதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு இடையே இரகசிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. மேலும் சில கட்சிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களை தனதாக்க பல்வேறு உக்திகளை கையாள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், உள்ளூராட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் அரசாங்கத்தின் அல்லது எதிர்க்கட்சியின் வேட்பாளர் கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
