கொழும்பு மேயர் வேட்பாளர்! ரோசி சேனாநாயக்க தொடர்பில் ஐ.தே.க முக்கிய அறிவிப்பு
ரோசி சேனாநாயக்க தேசிய மட்ட அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
மேலும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தின்போதே கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட ஏனைய மாநாகர சபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது.
சாகல ரத்நாயக்க
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க,
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றோம்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மாத்திரமின்றி ஏனைய பல்வேறு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு களமிறங்குவதற்கு முயற்சித்தோம்.
எவ்வாறிருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்தமையால் யானை சின்னத்தில் களத்தில் இறங்கியுள்ளோம்.
பலம் மிக்க குழு
மக்களுக்கு சேவையாற்றிய பலம் மிக்க குழுக்களையே நாம் களமிறக்கியுள்ளோம். அதற்கமைய இம்முறை சிறந்த வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகின்றோம்.
வேட்புமனுக்களுக்கு செயற்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதே ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாயமாகும். அதேபோன்று தான் குழுக்களின் தலைவர்கள், மேயர் வேட்பாளர்களும் நியமிக்கப்படுவர்.
அடுத்த வாரம் செயற்குழு கூடி இவை தொடர்பான தீர்மானங்களையும் எடுக்கும். அதற்கமைய உரிய நேரத்தில் இந்த தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்போம்.
ரோசி சேனாநாயக்க தேசிய மட்ட அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை
எவ்வாறிருப்பினும் அவர் கொழும்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
