புஷ்பிகாவிடம் 500 மில்லியன் இழப்பீடு கோரும் கொழும்பு மேயர்
திருமதி அழகு ராணி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தனது சட்டத்தரணி மூலம் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த உலக திருமதி அழகு ராணி போட்டியின் இறுதிப் போட்டி முடிவுகளை மாற்ற தான் அழுத்தங்களை கொடுத்ததாக கூறியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரோசி சேனாநாயக்க தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்காக தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
குறிப்பிடப்பட்டுள்ள நாளில் கோரியுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்தி, தன்னிடம் மன்னிப்பு கோரவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கொழும்பு மேயர் தனது சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



