காணாமல் போன ஆவணம் தொடர்பில் நீதவானுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
காணாமல் போன வழக்கு ஆவணம் ஒன்று தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கல்கிசை நீதவான் கோசல சேனாதீரவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கல்கிசை நீதவான் சேனாதீரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காணாமல் போன இந்த ஆவணம்,, பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரியை வாகனம் ஒன்றினால் மோதிக்கொன்றதாக நம்பப்படும் பிரபல பாதாள உலக பிரமுகர் வெலே சுதாவின் இளைய சகோதரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது என்று கூறப்படுகிறது.
முன்னதாக குறித்த பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய வழக்கு காணாமல் போயுள்ளதாக, கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி, கல்கிசை நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக ட்ரம்ப் மிரட்டியதாக கூறப்படும் விவகாரம்: ரஷ்யாவின் பதில் News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
