தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி - கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.
கல்வி அமைச்சு நடவடிக்கை
இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் விபரீத முடிவு
நேற்று முன்தினம் 15 வயதான பாடசாலை மாணவி, தாமரை கோபுரத்தின் 29ஆவது தளத்திலிருந்து வீழ்ந்து உயிரை மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெருவிலுள்ள கட்டடம் ஒன்றில் இருந்து பாய்ந்து இரண்டு மாணவர்கள் உயிரை மாய்த்திருந்தனர்.
இதன் காரணமாக அவர்களின் நெருங்கிய நண்பியான 15 வயதான குறித்த மாணவி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 15 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
