கொழும்பில் மருந்து ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு குழந்தை மரணம்!
கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
அவிசாவளை - எபலபிட்டிய பிரதேசத்தினை சேர்ந்த எட்டு மாத குழந்தையான டெஷான் விதுநெத் திடீர் சுகயீனம் காரணமாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உடல் தகனம்
இதன்போது குழந்தைக்கு நோய் உறுதி செய்யப்படாமல் யூகத்தின் அடிப்படையில் வலிப்பு எதிர்ப்பு மருந்து வழங்கி மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், டெஷானின் உடல் நேற்று பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது..
எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri