தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வீதியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இன்று (21) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி பின்னால் வந்த மற்றுமொரு காருடன் மோதியுள்ளது.
காயமடைந்தவர்களின் விபரம்
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது குழந்தையும், இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பத்தேகம மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துருகிரிய மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கதிர்காமத்திலிருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
