கொழும்பில் முப்படையின் கடுமையான நடவடிக்கை! இராணுவத் தலைமையகத்தில் இரகசிய முடிவு - இராணுவ ஆய்வாளர்
கொழும்பு - காலிமுகத்திடலில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒரு திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், இந்த இராணுவ நடவடிக்கைக்கு அவர்கள் பெயரொன்றை வைத்திருப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் அதனை வெளியில் கூறுவதில்லை. ஏனென்றால் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கை.
இலங்கை அரசாங்கமானது முழுமையான படை நடவடிக்கை மூலம் போராட்டத்தை இல்லாது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட படை நடவடிக்கை தான் இது. இதற்கான அங்கீகாரம் அனைத்துலக சமூகத்தினரால் புதிய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 36 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
