இலங்கை கடற்பரப்பிற்குள் இரசாயன கப்பலில் பாரிய தீ பரவல் - தயார் நிலையில் போர் கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இரசாயன பொருட்களை கொண்ட கொள்கலன்களை ஏற்றிய கப்பலில் தீப்பிடித்துள்ள நிலையில் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரும், துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களும் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன பொருட்களின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் தீ அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொள்கலன்களுக்குள் திடீரென தீ பற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக கப்பலில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
என்ற போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் யுத்த கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.