புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி! குழப்பமடைந்த பயணிகள்
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் நேற்று மாலை 04.00 மணியளவில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் மாலை 04.26 மணியளவில் நிறுத்தப்படவிருந்தது.
இறங்கும் இடத்தினை தவறவிட்ட பயணிகள்
இதன்போது தமது கடமைகளை முடித்துக்கொண்டு கிருலப்பனை நிலையத்தில் இறங்கி வீடுகளுக்குச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் காத்திருந்த நிலையில் சாரதி மறதியாக புகையிரதத்தினை நிறுத்தாது சென்றுள்ளார்.
சாரதியின் கவனக்குறைவினால் இறங்கும் இடத்தினை தவறவிட்ட பயணிகள் நுகேகொட புகையிரத நிலையத்தில் நிறுத்திய உடன் இறங்கி அங்கிருந்து நடந்து சென்றுள்ளனர்.
இதேவேளை, சாரதியின் பொறுப்பற்ற செயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன்,சற்று நேரம் அமைதியின்மையும் நிலவியுள்ளது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
