கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் (Video)
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த செயற்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மக்களின் கையெடுத்துகளை திரட்டும் நடவடிக்கையும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.







சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri