மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ள கொழும்பின் முக்கிய பகுதி! பாரிய விபரீதம் குறித்து எச்சரிக்கை(Video)
கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள மேம்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மேம்பாலமானது பல இடங்களிலும் சேதமடைந்து காணப்படுவதுடன் இதனை புனரமைத்து தருமாறு அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வருபவர்களும், அருகிலுள்ள வியாபாரிகள், தலைநகரை நோக்கி வருபவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பாலம் அபாய கட்டத்தில் இருக்கும் நிலையில், உரியவர்கள் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறும், இல்லையெனில் பாரிய ஆபத்தான நிலையை பயணிக்க மக்கள் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது ஊடகக் குழுவினர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு விரிவாக ஆராய்ந்தனர்.
அது குறித்த விசேட தொகுப்பு,