கொழும்பை முடக்கினாலும் பிலியந்தல பிரதேசத்தை காப்பாற்ற முடியாது - வைத்திய அதிகாரிகள் சங்கம்
கோவிட் ஒழிப்பு செயற்பாடுகளுக்காக விஞ்ஞான ரீதியாக எடுக்கப்படும் உடனடியாக தீர்மானங்களை அரசியல் அல்லது வேறு அழுத்தங்கள் காரணமாக மாற்றியமைக்கான பிரதிபலனை தற்போது பிலியந்தல மக்கள் அனுபவித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழினுட்ப தீர்மானங்களை மாற்றுவது எந்த வகையிலும் சரியானது அல்ல எனவும், அது மக்களுக்கு இழைக்கும் அநீதி எனவும், அந்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே கூறியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட அதிகளவான கோவிட் தொற்றாளிகளில் 126 பேர் பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் முழு கொழும்பு மாவட்டத்தை முடக்கினாலும் பிலியந்தல பிரதேசத்தைக் காப்பாற்ற முடியாது என அந்த பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan