சுவீடன் வாழ் இலங்கைத் தமிழருக்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
சுவீடனில் இருந்து இலங்கை வந்த தமிழ் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் அபாரதம் விதித்துள்ளது.
இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் அநாகரிகமாக செயற்பட்ட நபர், தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்ட நிலையில், 26 ஆயிரத்துக்கு 500 ரூபாய் அபாரம் செலுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல உத்தரவிட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்து கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
சிறைத்தண்டனை
இதன்போது சுவீடனில் குடியுரிமை பெற்ற 65 வயதான இலங்கையர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது அபாரம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண்ணின் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், முறைப்பாட்டாளர் நஷ்டஈட்டை எதிர்பார்க்கவில்லை என, நீதிமன்றில் தெரிவித்தனர்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam