கொழும்பில் இளம் தாயின் கொடூர செயல் - பரிதவித்த 2 பிள்ளைகள்
கொழும்பின் புறநகர் பகுதியான களனியில் பிள்ளைகளை சித்திரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயது சிறுமி மற்றும் 13 வயதுடைய மனநலம் குன்றிய சிறுவனை சித்திரவதை செய்த தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனியில் வாடகை அடிப்படையில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைதுசெய்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளும் பொலிஸ் காவலில்
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான தாய் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு வரும் வரையில் இரு பிள்ளைகளை மிகவும் பாதுகாப்பற்ற அறையில் அடைத்து வைத்து குழந்தைகளை கொடூரமாக நடத்தியுள்ளார்.
பிள்ளைகளின் கல்வி, போஷாக்கு குறித்து கவனம் செலுத்தாமல் குறித்த தாய் செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்குரிய தாய் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |