கொலைக் குற்றமொன்றுக்கு 22 வருடங்களின் பின் கொழும்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு
கடந்த 22 வருடங்களுக்கு முன் கொழும்பு (Colombo), கேஸ் பஹா சந்திப் பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சிக்கிய குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் (Amal Ranaraja) இன்று (29.04.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி கொழும்பு கேஸ் பஹா சந்திப்பகுதியில் சின்னையா நடேசன் என்ற நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்நிலையில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வழக்கின் இரண்டாவது மற்றும் நான்காம் பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
