கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் ஆளுங்கட்சிக்கு மீண்டும் ஆதரவு
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சிக்கு முன்னர் ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் மீண்டும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தரப்பு, போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சி தரப்பில் இருந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகத்தை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சமா! என்பிபியிடம் கொடுக்கல் வாங்கல் டீல் இல்லை
வரவு செலவுத்திட்டம்
இந்நிலையில் கடந்த 22ம் திகதி மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிர்க்கட்சி தரப்பில் இருந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த ஐந்து உறுப்பினர்கள் , வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இதன் காரணமாக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகள் மட்டும் கிடைத்திருந்த நிலையில் எதிராக 60 வாக்குகள் அளிக்கப்பட்டு, வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கொழும்பு மாநகர சபையின் அதிருப்தியாளர் குழுவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், குறித்த தரப்பு மாநகர சபை உறுப்பினர்கள் ஐவர் மீண்டும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
இதனையடுத்து நாளைய தினம் மீண்டும் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.