கொழும்பு - நானுஓயா பேருந்து விபத்து – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
நானுஓயாவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களிற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான காயங்களிற்கு உள்ளானவர்களை கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்த போது நானுஓயா - ரதெல்ல வீதியில் வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்களில் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் 6 பேர் வானில் பயணித்தவர்கள் என்றும் மற்றொருவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
May you like this Video

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
