அகில இலங்கை ரீதியில் சாதித்துக் காட்டிய தமிழ் மாணவன்
2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி தமிழ் மாணவரான ஜெயச்சந்திரன் துவாரகேஷ் சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜெயச்சந்திரன் துவாரகேஷை எமது லங்காசிறி சேவை சந்தித்த போது அவர் தன்னுடைய பல கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இதன்போது எதிர்வரும் காலங்களில் க.பொ.த உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு துவாரகேஷ் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, எல்லா இடங்களுக்கும் வகுப்புக்களுக்கு சென்று திரிய வேண்டாம். முடிந்தளவு வீட்டில் சுயமாக படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். விளங்கிப் படிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
யாரையும் முன்மாதிரியாக வைத்துக் கொண்டு படிப்பதற்கான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்துக் கொண்டு உங்களுக்கென ஒரு பாணியை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களது பெறுபேறுகளுக்கு முழு பொறுப்பும் நீங்களே என்பதால் உங்களின் முழு அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.