ஆபத்தான கட்டத்தில் கொழும்பு
கொழும்பு மாவட்டத்தில் 46,600 ஹெக்டேயர் சதுப்பு நிலங்களில் சுமார் 2,000 ஹெக்டேயர் மட்டுமே எஞ்சியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு பணிகளால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் சேதம் இருமடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலைமையின் கீழ் வெள்ள நீரை கட்டுப்படுத்துதல், பல்லுயிர்களை பாதுகாத்தல் மற்றும் சூழலியல் சமநிலையை பேணுதல் போன்றவற்றில் கொழும்பின் திறன் வேகமாக குறைந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களின் கீழ், குறிப்பாக பெரிய கட்டிடங்கள் மற்றும் வீதிகள், குறிப்பாக நகர்ப்புறங்களில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் மூத்த ஆலோசகர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கோட்டை, புறக்கோட்டை, பத்தரமுல்லை மற்றும் மேலும் சில பகுதிகளில் வயல் நிலங்கள் சட்டவிரோதமான முறையில் மண் நிரப்பப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சதுப்பு நிலங்களைக் கொண்ட கொழும்பில் எஞ்சியுள்ள ஈரநிலங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சதுப்பு நிலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு வனவிலங்கு சட்டம் போன்ற வலுவான சட்டத்தின் மூலம் பாதுகாக்க வேண்டும் என சுற்றாடல் நீதிக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.